டில்லி:

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிறப்பு இயக்குனர் அஸ்தானா கூறிய புகாருக்கு ஆதாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிபிஐ இயக்குனர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக வர்மா, அஸ்தானா இருவரையும் கட்டாய ஓய்வில் செல்ல மத்தியஅரசு உத்தர விட்டது.  இதை எதிர்த்து வர்மான தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், புகார் குறித்து, மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அறிக்கை  குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாய்க ஆய்வு மேற்கொண்டு இரண்டு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, சிவிசி அறிக்கையை ஆய்வு செய்த  நீதிபதி பட்நாய்க உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதை ஆய்வு செய்த உச்சநீதி மன்றம், அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக பதவியில் தொடரலாம் என அதிரடி உத்தரவிட்டது.

ஆனால், மோடி தலைமையிலான சிபிஐ இயக்குனர் குழு, அலோக்வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து தூக்கியடித்தது. அதை ஏற்காத அலோக் வர்மான தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் நீதிபதி பட்நாயக் அறிக்கை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.  வர்மா மீது அஸ்தானா கூறிய புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று நீதிபதி பட்நாயக் தெரிவித்து உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. மேலும்,   மத்திய கண்காணிப்பு ஆணைய அறிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உறுதி படுத்தி உள்ளார். இதன் காரணமாக தலைநகரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.