வாஷிங்டன்,

மெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை என  அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்திற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ஆனால், டிரம்ப் பதவியேற்ற பிறகு, முன்னாள் அதிபர் அமல்படுத்தி இருந்த பல்வேறு திட்டங்களை ரத்து செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது,  அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது என்பதை பரிந்துரைப்பதாகவும், அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.