இதுவரை இந்தியால் தேங்கியுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பதற்கு அதிகாரபூர்வ பதில் எங்களிடம் இல்லை. ஆனால் இதுகுறித்து கணக்கிட நியமிக்கப்பட்ட நிபுணர்குழுக்கள் அளித்த அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
notes7
அரசு தானே முன்வந்து தங்களது வருமானத்தை அறிவிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. வருமானவரித்துறையின் நடவடிக்கைகளுக்கு பயந்து இதுவரை 64,275 பேர் தங்களிடம் 65,250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தாங்களே முன்வந்து அறிவித்துள்ளனர்.
அப்படியும் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துருக்கும் பண முதலைகளை முடக்க அரசு திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. போதுமான முன்னேற்பாடுகளின்றி செய்த அவசர நடவடிக்கை என்று இதற்கு எதிர்கட்சிகள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் திடீரென்று கடும் பண பற்றாக்குறை ஏற்ப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியோ நாட்டில் பணப் பற்றாக்குறை ஏதும் இல்லை, போதுமான பணம் கையிருப்பில் உள்ளது என்று கூறிவருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காங்கிரசின் குற்றச்சாட்டை “உள்நோக்கம்” கொண்டது என்று விமர்ச்சித்திருக்கிறார்.
நவம்பர் 8-ஆம் தேதி அரசு மேற்க்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பிறகு டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் வருமானவரித்துறை ரெய்டுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் வங்கிகளில் பெரிய அளவிலான டெப்பாச்சிட்டுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.