ஆர்.எஸ்.எஸ் பணத்தை எப்படி மாற்றும்? ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

Must read

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல, ஒரு என்.ஜி.ஓவும் அல்ல, ஒரு டிரஸ்ட்டும் அல்ல அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியும் அல்ல. ஆக ஆர்.எஸ்.எஸ் நிறுவனம் எந்த விதத்திலுமே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு. ஆனால் அந்த அமைப்புக்கு “சரவா” என்ற பெயரில் ஒவ்வொரு விஜயதசமியன்றும் நாக்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பேரணியில் தொண்டர்கள் தரும் காணிக்கைகள் 500 அல்லது 1000 நோட்டுக்களில் வந்து மலை போல குவிவது உண்டு. இந்த 500, 1000 நோட்டுக்களை எப்படி எந்த கணக்கில் மாற்றும்? அந்தப் பணம் எங்கே போகும்?

rss3

இந்த கேள்வியை எழுப்பியிருப்பவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரனும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் அம்பேத்கர், இந்த கேள்வியை அவர் கேட்டிருப்பது பிரதமர் நரேந்திர மோடியிடம்! பிரதமர் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ரூ.700 கோடி நன்கொடை அமெரிக்காவில் இருந்து வந்தது. அந்தப் பணத்தைக் குறித்து வருமானவரித்துறையை சேர்ந்த குப்தா என்பவர் விசாரணை மேற்கொண்டார். அவரது கெடுபிடி தாங்க முடியாமல் அப்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கதறின. ஆனால் வெகுவிரைவில் வி.பி.சிங் அமைச்சரவை கவிழ்க்கப்பட்ட பின்னர் அந்த அதிகாரி மாற்றப்பட்டார். அதன் பின்னர் அந்த 700 கோடிப் பணம் எங்கே போனது என்ன ஆனது என்பது சிதம்பர ரகசியம் ஆகிப்போனது.
ஆனால் இந்தமுறை அப்படி ஆகாது என நம்பலாம். எவ்விதத்திலும் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை மாற்றும்? மாற்றப்பட்ட பணம் எங்கே போகும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என்று பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article