சென்னை:

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நடிகர் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளதாக என்று நடிகர் ரஜினி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் டுவிட்டரில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்டால் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.