சென்னை: தீபாவளியையொட்டி, காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் நாட்டு மக்களிடையே பிரபலம். ஆனால்,  காற்று மாசு காரணமாக,  பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு  உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும் டெல்லி உள்பட பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பட்டாசு தொழிலாள நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான சிறுகுறு பட்டாசு தயாரிப்பு ஆலைகளும் நலிவடைந்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டும் தீபாவளி அன்று,  அபட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. , காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.