லண்டன்: காலி மைதானத்தில் ஆடியதால், முதன்முறையாக இங்கிலாந்து ரசிகர்களுக்கு என்னை வசைபாடும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்.

இங்கிலாந்தில் டி-20 தொடரில் பங்கேற்றுவரும் அவர் கூறியதாவது, “இங்கிலாந்தில் முதல்முறையாக ரசிகர்களின் வசையிலிருந்து தப்பினேன். அதுவும் நன்றாகத்தான் இருந்தது. ரசிகர்கள் பார்வையிலிருந்து பார்த்தால் ஆளில்லாமல் ஆடுவது விசித்திரமான அனுபவம்தான்.

ரசிகர்கள் இருந்தால்தான் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆட முடியும். அதனால்தான் உள்நாட்டு சாதகமும் உண்டு; வெளிநாட்டுச் சாதகமும் உண்டு.

மீண்டும் 6 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இறுதி ஓவர்களில் இங்கிலாந்து நன்றாக வீசினர். அதன்மூலம் அவர்கள் எங்களை வீழ்த்தி விட்டனர்.

பவுண்டரிகளை அடிப்பது எப்படி என்பதை திட்டமிட வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதோடு மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க வேண்டும்” என்றார் அவர்.