சென்னை: சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரி முனையைக் காட்டிலும் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது” என பாதயாத்திரை தொடங்கி உள்ள ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தேசிய கொடி கொடுத்து, நேற்று (7ந்தேதி) மாலை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
இன்று என் சகோதரர் ராகுல்காந்தி இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், நமது குடியரசின் உயர்ந்த இலட்சியங்களை நிலைநிறுத்தவும், நம் நாட்டு மக்களை அன்புடன் ஒன்றிணைக்கவும் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
#BharatJodoYatra தொடங்குவதற்கு சமத்துவ சிலை தலைநிமிர்ந்து நிற்கும் குமரியை விட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.