சென்னை:
தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் நடை முறைப் பட்டு வருகிறது. இதையொட்டி தொற்று நோய் பரவல் தடுப்பு பணியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுடன் காவல்துறையினரும இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் முகக்கவசம் உள்பட நோய் தடுப்பு உபகரங்களுடன் பணியாற்றும்படியும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன. இருந்தாலும், பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவதை தமிழக காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு இதுவரை கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகின்றனர்.
இதுதவிர மதுரையில் காவல்துறையினர் மற்றும் ;தீயணைப்புத் துறையினர் 5 பேர், திருவள்ளூரில் 12 பேருக்கும் , கோவையில் 7 பேருக்கும், செங்கல்பட்டு காவல்துறையைச் சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.