துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

Must read

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் நள்ளிரவு வந்து இறங்கிய 2 விமானங்கள் மூலம் வந்துள்ளனர்.

இரண்டு விமானங்களில் வந்து இறங்கிய 358 பேருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொல்ளப்ட்டுள்ளன.

அதன் பிறகு அனைவரும் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப ஓட்டல்கள், அரசு தனிமை விடுதிகள் போன்ற இடங்களில் தனிமையில் தங்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி 82 பேர் ஓட்டல் ராயல் ரெஜென்சியில் தங்கி மாநகராட்சியின் மருத்துவக் கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைப் போல் 24 பேர் ஹில்டன் ஓட்டலில் உள்ளனர்.

மீதமுள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடத்தும் வி ஐ டி கல்லூரியில் உள்ள தனிமை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

More articles

Latest article