நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் 1.25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் தனுஷ் என்ற 19 வயது வாலிபரை காவல்துறையினர் திருப்பூர் அருகே கைது செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் 11 ம் தேதி ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ல் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பில் பணியாளராக வேலை செய்த தனுஷ் தனது கையில் ஒரு பெரிய பையுடன் வெளியேறினார்.

இதைப் பார்த்து அவரை பிடிக்க சென்றபோது அவர் அங்கிருந்து தப்பி விட்டார், பின்னர் எனது அறையை சோதனையிட்ட போது அங்கிருந்த 40,000 ரூபாய் மதிப்புள்ள கேமிரா உள்ளிட்ட வேறு சில பொருட்களுடன் எனக்கு பிடித்த விலைமதிப்புள்ள சில ஆடைகளும் காணாமல் போயிருந்தது என்று காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு அவரது தாயாரிடம் நடத்திய விசாரணையில் தனுஷ் அங்கு வரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், நேற்றிரவு திருப்பூரில் தனுஷ் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய சில ஆடைகள் மற்றும் நாய்க்கு பயன்படுத்தும் முடி டிரிம்மர் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.