தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அபிமானம் பெற்று வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர் அபர்ணா பாலமுரளி.

மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மகேசென்ட் பரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

சமீபத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த தீதும் நன்றும் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஆக்ஷன் ட்ராமா த்ரில்லரான இந்த படத்தை ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். கெவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஸும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. புடவை கட்டத்தெரியாமல் தவிக்கும் அபர்ணாவின் நடிப்பு திரை விரும்பிகளை கவர்ந்து வருகிறது.