ஈஷா யோகா அமைப்புடன் இணைந்து, கலர்ஸ் தமிழ், மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தை பிரத்யேகமாக நேரலையில் ஒளிபரப்பவிருக்கிறது. 2021 மார்ச் 11, வியாழனன்று இரவு 11:30 மணியிலிருந்து மஹாசிவாரத்திரி கொண்டாட்டம் 2021 – ஐ கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டுகளிக்கலாம் .

மனதிற்கு பரவசமூட்டும் இசை நிகழ்ச்சிகள்: மஹாசிவராத்திரி கொண்டாட்டம், கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் சிறப்பான சங்கமமாக நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் சிவபெருமானின் புகழைப்பாடுவதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

கபிர் கஃபே, குட்லே கான் புராஜெக்ட், சந்தீப் நாராயண், மாங்குலி, பார்திவ் கோஹில், அந்தோணி தான் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா ஆகிய குழுக்கள் இதில் பங்கேற்று, இசை நிகழ்ச்சிகளை தெய்வீக மணத்துடன் வழங்குகின்றனர்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.