சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் பனேசிங் பவேரியன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் குலைநடுங்க வைத்தவர் ரோஹித் பதக்.
இப்படிப்பட்ட அதிரடி நடிகரே பயந்த விசயம் எதற்குத் தெரியுமா?
அவரே சொல்கிறார்.. கேளுங்கள்:
“ நான் நடித்த முதல் தமிழ்ப் படமே வெற்றி பெற்றிருப்பது.. எனக்கு நல்ல.. அதாவது “கெட்ட” பெயர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தீரன் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, எப்போதுமே சீக்கிரமாக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவேன். இயக்குநர் வினோத்தான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருவார். நான் சீக்கிரம் வருவதை பார்த்து. தன்னுடைய ய உதவி இயக்குநர்களிடம், என்னை படப்பிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு சொல்லிவிட்டார் வினோத்.
கார்த்தி போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. சிறந்த நடிகரான அவர், என்னோடு நட்புடன் பழகினார். பல காட்சிகளில் எனக்கு நிறைய உதவினார்.
பேருந்து மீது படமாக்கப்பட்ட சண்டைக்கட்சி பெரிதும் பேசப்படுகிறது. இந்தக் காட்சியை பத்து நாட்டகள் படமாக்கினார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க சண்டைப் பயிற்சி இயக்குநர் தினேஷ் எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார். அப்போது, தன்னுடைய உதவியாளர்களை என்னோடு பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தார். இதுபோன்ற சண்டைக்காட்சிகளின்போது எல்லாம் எனக்கு பயமே இல்லை” என்றவர், “படம் வெளியிடப்பட்ட அன்றுதான் பயந்துபோயிருந்தேன். அன்று என்னுடைய கைபேசியை அணைத்து வைத்திருந்தேன். காரணம்… படத்தைப் பற்றி எல்லோரும் என்ன சொல்லப்போகிறார்களோ… எப்படி எழுதப்போகிறார்களோ.. என்ற பயம்தான். அதுவும் எனது கேரக்டரைப் பற்றி என்ன சொல்வார்களோ என்ற பயமும்கூட.
ஆனால் இப்போது படத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள். எனது கேரக்டரும் பேசப்படுகிறது. இது மிகவும் மிகிழ்ச்சி அளிக்கிறது” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ரோஹித் பதக்.