ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை தணிந்திருக்கும் நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், ஆகஸ்ட் ஆரம்பத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து, திரையரங்குகளை திறக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தாலும் வலிமை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்று மாஸ் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் திரையரங்குக்கு செல்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.