சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு 5 மாதம் ஆகிவிட்டது. கொரோனா தொற்று ஊரடங்குதான் இதற்கு காரணம். 5 மாததத்தில் மாஸ்டர், ஜெகமே தந்திரம் சூரரைப்போற்று, அண்ணாத்த, வலிமை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கும். ஆனால் எல்லா உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.
மாஸ்டர், சூரரைப்போற்று, ஜெகமே தந்திரம் படம் முடிந்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறது. அண்ணாத்த, வலிமை படங்கள் ஊரடங்கால் ஷூட்டிங்கே முடியவில்லை. படப்பிடிப் புக்கு அரசு அனுமதி தந்துவிட்டது.
இனி அப்படங்களின் ஷூட்டிங் தொடங்க வேண்டியதுதான் பாக்கி தன் தன் தன் என்று வேகமாக படத்தைமுடித்து பொங்கலுக்கு அவர்கள் தயாராகி விடுவார்கள்.
ஊரடங்கு பெரும்பகுதி முடிந்து வழக்க மான பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் தியேட்டர் திறப்புக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. தியேட்டரை திறக்கக் கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் சென்ற வண்ணமிருக்கிறது.
இந்நிலையில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், ’இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம். பல மக்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது’ என தெரிவித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் உருவாகி இருக்கிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக் கிறார். மாஸ்டர் படம் போல் இப்படஉம் தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.