விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை நாளை (29 ஆம் தேதி) ‘அமேசான் பிரைம்’ ஓ.டி.டி.தளத்தில் வெளியிட, மாஸ்டர் தயாரிப்பாளர் அனுமதி அளித்துள்ளார்.

தியேட்டர்களில் படம் வெளியான 16 நாட்களில், அதனை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களை அலற வைத்துள்ளது.

ஏன்?

மாஸ்டர் திரைப்படத்தை பொறுத்த வரை, தியேட்டரில் முதல் இரண்டு வாரங்கள் கிடைக்கும் லாபத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்து விட வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்களுக்கு எஞ்சிய 30 சதவீத வசூலே, பங்கு தொகையாகயே கிடைக்கும்.

இரண்டு வாரங்களுக்கு பிறகே தியேட்டர்காரர்களுக்கு 40 சதவீத லாபம் கிடைக்கும் என்ற நிலையில் மாஸ்டர் படத்தை நாளை (29) அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடுவதை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

“மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக ஓடி, லாபம் குவிக்கும் சமயத்தில் ஓ.டி.டி.யில் வெளியிடுவது, எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள், தியேட்டர் உரிமையாளர்கள்.

– பா. பாரதி