புதுடெல்லி: 600க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நடிப்புக் கலைஞர்கள், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டு, தாங்கள் கையெழுத்திட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மதவெறி பிடித்த, வெறுப்பைக் கக்கும் மற்றும் அக்கறையற்ற பாரதீய ஜனதா கட்சியை, அதிகாரத்தை விட்டு அகற்றும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமாய், மொத்தம் 616 நடிப்புக் கலைஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

அமோல் பலீக்கர், அனுராக் கஷ்யப், டோலி தாக்கூர், லில்லெட் துபேய், நசீருதின் ஷா, அபிஷேக் மஜும்தார், அனாமிகா ஹக்ஸார், நவ்தேஜ் ஜோஹர், எம்.கே.ரெய்னா, மகேஷ் தத்தானி, கொன்கோனா ஷென் ஷர்மா, ரத்னா பதக் ஷா மற்றும் சஞ்சனா கபூர் ஆகியோர் அந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடித்து, மதசார்பின்மை, ஜனநாயகம் மற்றும் ஒருமைப்பட்ட இந்தியாவை காக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கை, மொத்தம் 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி