களக்காடு:

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள களக்காடு வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தீ மளமளவென அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வருவதால், அங்கு வசிக்கும் காட்டு விலங்குகள், பறவைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டந் துறை புலிகள் காப்பகம் உள்ளது. மேலும் அந்த மலைப்பகுதியில்  புலி சிறுத்தை யானை போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. ஏராளமான அரியவகை  மூலிகை செடிகளும் உள்ளன.

தற்போது கொளுத்தும் வெயில் காரணமாக, மலைப்பகுதியில் காய்ந்துகிடக்கும் சருகுகளில் தீ பிடித்து எரியும், உடனே அதை வனத்துறையினர் அனைத்து விடுவர். ஆனால், தற்போது பிடித்துள்ள காட்டுத்தீ கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வருகிறது. . உடனே அதை வனத்துறை வருகிறது.

முண்டந்துறை வன சரகத்திற்குட்பட்ட பாண்டியன் கோட்டை பகுதியில் தற்போது தீ பரவி உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் வனத்துறையினர் மிகவும் போராடி அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.