அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியால் ரஷ்யா, இஸ்ரேல் செயல்பாட்டில் திடீர் மாற்றம்

Must read

 

டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்பின் செயல்பாட்டால் ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 72 ரஷ்ய அதிகாரிகளை உடனடியாக வெளியேறுமாறு ஒபாமா உத்தரவிட்டிருந்தார். தேர்தலில் குடியரசு கட்சியின் சர்வர், அக்கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மேலாளரின் இ.மெயில் ஆகியவற்றில் ரஷ்யா ஊடுறுவி தகவல்களை சேகரித்து டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு உதவியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஜனநாயக அமெரிக்க தேர்தல் நடைமுறையை சிதைத்துவிட்டதாக ரஷ்யா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஷ்யா தூதரக உறவுகளை முறித்துக் கொண்டு 35 அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டது.
ஆனால், திடீரென இதில் ரஷ்யா பின் வாங்கியது. அமெரிக்க தூதரக அதிகாரிகளில் குழந்தைகளை க்ரெம்லினில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க புடின் அழைப்பு விடுத்தார்.

இதன் மூலம் டெனால்ட் டிரம்பிடம் ரஷ்ய ஆதரவு கொள்கையை புடின் விரும்புகிறார் என்பதை காட்டுகிறது. கடந்த காலங்களில் அமெரிக்க ரஷ்யா உறவு மிகவும் மோசமாக இருந்தது. வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வருகை மூலம் உறவு மேம்படும் என புடின் நம்புவதையே இது காட்டுகிறது.

ரஷ்யா மட்டுமின்றி இஸ்ரேல், பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் கூட ஓபாமாவின் வெளியேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாயு, அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

உலகளவில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த டெனால்டு டிரம்புடன் சுமூக உறவை ஏற்படுத்த இந்த நாடுகளும் முயற்சிக்கின்றன. டிரம்ப் வெற்றிக்கு இஸ்ரேல் அதிபர் வெளிநாட்டு தலைவர்களுடன் நட்புறவை அவர் ஏற்படுத்துவார் என்றும் நம்பிக்கையுடன் உள்ளனர். டிரம்பின் செயல்பாடு பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article