ஊதியம் கேட்டு போராடிய அப்பாவிகள் சிறையில் அடைப்பு! தலா 300 கசையடி தண்டனை!

Must read

சவுதி:

சவுதியில் உள்ள, “சவுதிபின்லாடின்” என்ற கட்டுமான நிறுவனம் அங்கு மிகப் புகழ் பெற்றது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கட்டிடங்களை கட்டி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். கடந்த வருடம் கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால், சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அப்போது பின்லாடின் என்ற இந்த நிறுவனம் உட்பட பல நிறுவனங்களும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டின. அந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் பலருக்கு இந்நிறுவனம் சம்பளம் தரவில்லை.

பொறுமை இழந்த தொழிலாளிகள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். இதை நிறுவனமோ, சவுதி அரசோ கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமான தொழிலாளர்களில் சிலர் அந் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை தீவைத்து கொளுத்திவிட்டனர். இது குறிதது வழக்கு பதிவு செய்த சவுதி காவல்துறை, ஐம்பது பேரை குற்றவாளி என நீதிமன்றத்தில் நிறுத்தியது. விசாரணையின் முடிவில், இந்த தொழிலாளர்களுக்கு 45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலருக்கு 300 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. ஆகவே இந்திய அரசு தலையிட்டு கசையடி தண்டனையை நீக்க உ.தவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Publish lashing in saudi for protesting for non payment of salary for labourers of india origin

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article