சென்னை: சென்னைஉயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஜனநாயகன் படம் தயாரிப்பு நிறுவனம், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ஆ ம் தேதி அன்று வெளியாகவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைப்பது தாமதமானதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜன நாயகன் படத்தை மறு ஆய்விற்கு அனுப்பியதை ரத்து செய்தும் உடனடியாக யு/ஏ சான்று வழங்குமாறும் ஜனவரி 9-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து சான்றிதழ் வாரியம் சார்பில் அன்றைய தினமே உயர் நீதிமன்ற அமர்வில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு வழக்கின் விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறும் வழக்கின் விசாரணை ஜனவரி 20-ஆம் தேதி மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு ஜனநாயகம் படம் குறித்து விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜனநாயகன் படம் தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படத்தை மறு ஆய்வுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.