சென்னை:

மிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கடந்த 2ந்தேதி தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  தொடக்க நாளான 2ந்தேதி ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து  ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வந்தனர்.

சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பேசினார். அப்போது பல்வேறு  தகவல்களை தெரிவித்து உள்ளார்.

மக்கள் நலப் பணிகளை ஜெயலலிதா வழியில் தொடர்ந்து செய்து வருகிறது தமிழக அரசு.

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், 6200 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற

முதியோர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

 தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது

காவல்துறையினருக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்க பயிற்சி வழங்கப்படுகிறது
 
மக்களின் பாதுகாப்பிற்காக பொது இடங்களில் கேமராக்கள் பொருத்துவதில், இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.

கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ரூ.308 கோடி செலவில் 3087 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த மனிதவளம், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது இதனால், தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன

பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதால், 50,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் புதிதாக தொடங்க 30 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது
 
 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 27 நிறுவனங்கள் 50 ஆயிரம் கோடி முதலீடு, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

முதலமைச்சர் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது

அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல், கலாச்சாரம், கோவில்கள் பாதுகாப்பு ஆகியவையே அதிக நபர்கள் வருகைக்கு காரணம்

2016-17 ஆண்டில் மட்டும், காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.3,526 கோடி பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

தமிழகம் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.