நாகர்கோவில்:
காவிரி தீர்ப்பில், ‘ஸ்கீம்’ என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே ஸ்கீம் என்ற வார்த்தை குறிப்பிடுவதாக தமிழக அரசு மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று , கன்னியாகுமரியில் செய்தியாளிடம் பேசியபோது அவர் கூறியதாவது,
காவிரி பிரச்சினையில், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட வில்லை என்றும், காவிரி தீர்ப்பில், ‘ஸ்கீம்’ என்பது பற்றி உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்னையில்லை என்றார்.
காவிரியில், தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், ஆளுங்கட்சியின் விருப்பப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தால் அது தேர்தலே அல்ல. முறைப்படி நடந்தால் மட்டுமே அது தேர்தல். கூட்டுறவு சங்க தேர்தல் என்பது வருத்தத்தக்க வகையில் உள்ளது. நடிவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.