சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், காவிரி பிரச்சினை மற்றும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் அந்தபகுதி மக்கள் 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக போராட்டம் தீவிர மடைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான  ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.