சென்னை:
நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் – வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் – சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வாகாது.
நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும். இது கொல்லைப்புறமாக அமைந்த அடிமை அரசு கிடையாது; தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட கழக அரசு. ஒன்றிணைந்து செயல்பட்டு நீட்டை விரட்ட அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.