சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

Must read

சேலம்:
சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 7 தலைமுறையாக இயங்கி வரும் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் இயக்குநரான சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் (78) உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காலமானார்.

சிவராஜ் சிவகுமார் மறைவுக்கு பிறகு அவரின் மகன் சஞ்சய் சிவராஜ், சிவராஜ் சித்த வைத்திய சாலையினை கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று பிப். 10ஆம் தேதி சஞ்சய் சிவராஜ் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். தந்தை இறந்த ஒரே வருடத்தில் அதே தேதியில் மகனும் இறந்திருப்பது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article