புதுடெல்லி:
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வந்து விட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்’ என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel