சமீபத்தில் சந்தானம் தனது ரசிகர் மன்ற தலைவர் நடத்தும் கால் டாக்சி சேவையின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சந்தானம் எலும்பும், தோலுமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் சந்தானம் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்து ஒல்லியாகக் காணப்பட்டார்.
அதிர்ச்சி அடைந்த ரசிகளர்களை கண்டு அவரே அதற்கு காரணம் கூறினார் : நான் நலமாக உள்ளேன். நான் நடிக்கும் டகால்டி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. வெயிட் போட வேண்டும் என்றால் மூன்று நேரமும் பிரியாண சாப்பிட்டால் போச்சு என்று தன் ஸ்டைலில் தெரிவித்தார் சந்தானம்.