சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயியில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த வெயில் மேலும் 2 நாட்கள் நீடிக்கும்எ ன தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை கிளை தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, தென்தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை காணப்பட்டு என்றும்,
மேற்குதிசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும், ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியன் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவே வெயில் சுட்டெரிக்கும் என்றும், மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் செப்டம்பர் மாதத்தில் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருப்பது செப்டம்பரில் இதுவே முதல்முறை. சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது.
கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வெயில் சுட்டெரிக்கிறது. மதுரையில் இன்றும் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். சென்னையில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். செப்டம்பர் 20-க்கு பிறகு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு, 25-ம் தேதிக்கு பிறகு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை….