சென்னை,

ல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவாக வரும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரையும் விரட்டியடித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழகம் முழுவதும் இளைஞர்கள். அவர்களுக்க ஆதரவாக கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.

இளைஞர்களி,ன  கோபம் மத்திய அரசின் மீதும் மாநில அரசின் மீது மட்டுமல்ல திமுகவினர் மீதும் திரும்பியுள்ளது. போராட்ட களத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் கட்சியினரை விரட்டி அடித்து வருகின்றனர்.

இளைஞர்களுக்க ஆதரவு தெரிவிக்க வந்த முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட்டை வீசி எரிந்தனர்.

இளைஞர்கள் போராட்டத்தை திமுக போராட்டமாக மாற்ற திமுக முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முற்பட்டனர். ஆனால், அவர்கள் போராட்டக்களத்தில் உள்ள இளைஞர்களால் விரட்டி யடிக்கப்பட்டனர்.

 

கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு வாழ்த்துகூறி ஆதரவு தெரிவிக்க  சென்ற  திமுக பிரமுகர், இ.ஜி.சுகவனம் போராட்டக்காரர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.

இதே போல் திருச்சியில் போராட்டகாரர்களை சந்திக்க சென்ற கே.என்.நேருவை எதிர்கொண்ட இளைஞர்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்கிறோம் நீங்கள் கிளம்புங்கள் என்றனர். அப்போது அவர்மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து இளைஞர்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.

இளைஞர்களின் எழுச்சி காரணமாக தமிழக  அரசியல்வாதிகளும் கதிகலங்கிபோய் உள்ளனர்.