ஜல்லிக்கட்டு:  பிரதமர் மோடியை சந்திக்கும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., !

Must read

ஏற்கெனவே இருமுறை பிரதமரை சந்திக்க முயன்று முடியாத அதிமுக எம்.பி.க்கள்
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை காலை பத்து மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவகிறது. சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் நேரத்துக்கு நேரம் அதிகரித்துக்கொண்டே உள்ளனர். தவிர, மாணவர்களும் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முக்கிய கோரிக்கை, “தமழக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து வலியுறுத்த வேண்டும்” என்பதாகும்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதன் பின் குடியரசு
தலைவர் பிரனாப் முகர்ஜீயையும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., சந்திக்க இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல் பரவியிருக்கிறது. ஆனால் இரு முறை முயற்சித்தும் அதிமுக எம்.பிக்க் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article