சென்னை:

ந்திய சீன நாட்டு அதிபர்கள், அதிகாரிகள்  சொகுசாக நட்சத்திர விடுதிகளில் ஓய்வெடுக்க, அவர்களின் பாதுகாப்புக்காக பல நாட்களாக இரவு பகல் பாராது பணியாற்றி வரும் தமிழக காவல்துறையினர், எந்தவித வசதிகளும் இன்றி, கடற்கரையில் படுத்த துயிலும் காட்சி வெளியாகி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாம்மல்லபுரத்தில் நடைபெறுவதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே சென்னை முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு கெடுபிடிக்கள் இறுக்கப்பட்டது. அதன்படி 24 மணி நேரமும், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலையோரங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக மாமல்லபுரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள கடற்கரை பகுதிகள், சிற்பங்கள் உள்ள மலைப்பகுதிகள், விடுதிகள், காட்டுப்பகுதிகள், சாலைப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர்  கடந்த ஒரு வாரமாக இரவுபகல் பாராமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.

ஒருவழியாக நேற்று சீன அதிபர் மாமல்லபுரம் வந்து, சிற்பங்களை பார்வையிட்டும், கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், விழாவை முடித்துவிட்டு, நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.

இந்த  நிலையில், கடந்த 10 நாட்களாக பாதுகாப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அதிபர்களின் சந்திப்புக்கு பக்கபலமாக இருந்து,  எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் காத்து வந்த காவல்துறையினர் நேற்று இரவு சற்றே ஓய்வெடுத்தனர்.

உறங்குவதற்குகூட இடமின்றி கடற்கரை பகுதியில் அனாமதேயமாக, அப்படியே சீருடையுடன் காவலர்கள் துயிலும் காட்சி புகைப்படம் வைரலாகி வருகிறது..

இதற்க நன்றி தெரிவித்துள்ள தமிழக காவல்துறை,  அவர்களுக்கு எங்களது  மனமார்ந்த வணக்கங்கள். வேலையில் அவர்களைப் பார்த்திருக்கிறோம், நாங்கள் நன்றாக தூங்குவதற்கு அவர்கள் தூக்கமின்றி செல்வார்கள் என்று எப்போதும் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அவர்கள்  நம் நலனுக்காக எல்லாவற்றையும் தாங்குகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு மட்டுமே,  அவர்களுக்கு நன்றி சொல்ல முடியும் என்று தெரிவித்து உள்ளது.