மதுரை: தமிழின், தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என  அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. இதை கண்டு சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் என்று விமர்சித்தார்.

தமிழரின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் பல்வேறு அரிய பொருட்கள் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 8வது கட்ட கலந்தாய்வில் 6ம் நூறாண்டைச்சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நமது நாட்டின் பழக்க வழக்கங்களில் கிமு, கி.பி. என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழர்களின் வரலாறோ 6ம் நூற்றாண்டிலேயே பிரமிக்கத்தக்க வகையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழரின் தொன்மை கிமு.6ஆம் நூறாண்டுக்கு முந்தையது என தெரிய வந்துள்ளது. அகழாய்வு மூலம் தமிழகத்தில் அகச்சான்று, புறச்சான்று மற்றும் அறிவியல் சான்று நமக்கு கிடைத்து வருகிறது. தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் இத்தனை சான்றுகள் கிடைக்கின்றபோது, அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிலருக்கு மனம்வரவில்லை.

தமிழின் பெருமை, தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை,  அவர்களுக்கு நன்றாக எரியட்டும். தமிழகத்தில் நடக்கும் தொல்லியியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது. நாங்கள் தொடர்ந்து அகழாய்வு பணியை மேற்கொள்வோம் என கூறினார்.  தமிழ் நாகரிகத்தின் தொன்மையை, நாம் அடைந்திருக்கக் கூடிய சான்றுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நிறுவோம் என்றும் சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் கீழ்டி அகழ்வாய்வு, தொல்லியல் துறை குறித்து  வார இதழ் ஒன்றில் விமர்சித்து  கட்டுரை வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.