சென்னை: கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்  நடைபெற்றுள்ளது தொடர்பாக  சிபிஐ  விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

 திமுக ஆட்சிகாலமான  2021-23ம் ஆண்டுகளில் , மின்சாரதுறைஅமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது,  தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ1,183 கோடி மதிப்பில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘

இதுருகுறிதது சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  மனுவில், டிரான்ஸ் பார்மர்  முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர்- நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  பல கட்ட விசாரணைக்கு பிறகு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக அரசு மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை  மே 11ந்தேதி விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கோரியது. இதையடுத்து,   முன்னாள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ₹397 கோடி மதிப்பிலான மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து, மனுதாரர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து தற்போது, இந்த வழக்கை சிபிஐ கையிலெடுத்துள்ளது.  தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்பட சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிராஸ்பார்மர் ஊழல் வழக்கு! தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு

[youtube-feed feed=1]