சென்னை: மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசுதான் மத்தியஅரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு இலவசங்களை அறிவித்து வரும் நிலையில், சொத்துவரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் போன்றவற்றை உயர்த்தி வருகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி உயர்வு காரணமாக, விலைவாசிகள் உயர்ந்துள்ளது, சாமானிய மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசும் தன்பங்குக்கு வரிகளை உயர்த்தி வருவது எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது.

இந்த நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசும், அதிமுக அரசும்தான் காரணம் என்றும், கடநத்  10 ஆண்டுகளில் மின்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உளாளர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது ஏன் என தங்கமணி சொல்ல வேண்டும் என்றவர், அதிமுக ஆட்சியில் மின்துறைக்கு வாங்கிய கடனால், தற்போது ரூ.12,000 கோடி வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றார்.  கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 37 சதவீதம் அளவிற்கு மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.

ஆனால்,.தற்போது உயர்த்தப்பட உள்ள  மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை. 2.37 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகள் உள்ளன; இதில், குடிசை முதல் குடியிருப்புகள் வரை அடங்கும். 2.37 கோடி வீடுகளில், 1 கோடி இணைப்புகளுக்கான வீடுகளில் உள்ளவர்களுக்கு கட்டண உயர்வால் பாதிப்பில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இன்னும், முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளை களைந்து, சரி செய்யாமல், அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. எதற்கெடுத்தாலும், முந்தையஅரசு மீது குற்றம் சுமத்தி தங்கள் மீதான பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது.

முந்தைய அரசு சரியில்லை என்றுதானே திமுகவை மக்கள் அரியனை ஏற்றி உள்ளனர். அப்படி இருக்கும்போது, முந்தைய அரசை குறை சொல்லிக்கொண்டே இருக்காமல், மக்கள் நலனுக்கான பணிகளை திமுகஅரசு மேற்கொள்ள வேண்டும். வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக பெருமைப்பட்ட திமுக அரசு அதன்பிறகு வரிகளை உயர்த்தி வருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ள  சமூக ஆர்வலர்களின், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.