சென்னை,
கடந்த திங்கட்கிழமை பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். இதன் காரணமாக போராட்டத்தை முன்னின்று நடத்திய 9 பேர் மீது மிருக வதை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ந்தேதி ஆவணி அவிட்டம் அன்று பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதையடுத்து பன்றிகளை பிடித்து கட்டி, அதற்கு பூணுல் அணிவித்தனர்.
ராயப்பேட்டை அண்ணா சிலை அருகே பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பன்றிகளை அழைத்து வந்து, அவை களுக்கு பூணூல் போட முயற்சித்தனர்.
இந்த போராட்டத்தின்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கம், காவல் துறையினருக்கும் இடையே மாட்டிக்கொண்டு பன்றிகள் மிகவும் நொந்துபோயின.
அதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட பன்றிகளில் ஒன்று உயிரிழந்தது. மேலும் போராட்டத்திற்கு பயன்படுத்திய 4 பன்றிகளுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவை மீட்கப்பட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் ராயப்பேட்டை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.