திருச்சி,

ந்த மாதம் 25ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு புதிய வரவாக, ஜல்லிக்கட்டு காளையை அடக்குதல், ஆஞ்சநேயர் வடிவம், சிவலிங்கம் மேல் விநாயகர், சிங்கம், மயில், ரிஷபம், அன்னம் போன்ற உருவங்களில் விநாயகர் சிலைகளுடன், கிராபிக்சில் அசத்திய பாகுபடி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கி செல்வதுபோல, விநாயகர் சிவலிங்கத்தை தூக்குவது போன்று புதுமையாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிலைகள் வடிமைக்கும் பணி முடிவடைந்து வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு  விநாயகர் சதுர்த்தியின்போது,  சிவலிங்கத்தை சுமந்து செல்லும் பாகுபலி விநாயகர் சிலை, ஏர் கலப்பை மற்றும் கதிர் அரிவாளுடன் செல்லும் விவசாய விநாயகர் சிலைகள் பிரபலமாக இருந்தன.

இந்த ஆண்டு  காளை மீது கம்பீரமாகச் செல்லும் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.