மதுரை,
டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் வரவேற்பை பெற்ற கல்லூரிச் சந்தை தற்போது மதுரை மாவட்டத்துக்கு பதவி வருகிறது.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மகளிர் புதுவாழ்வு திட்டம் அடிப்படையில் கல்லூரிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
ஏற்கனவே பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, ரோவர் கல்லூரியில் நடைபெற்றது. அடுத்த மாதம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த கல்லூரி சந்தையில் அனைத்து விதமான கைவினை பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயார் செய்யும் பொருட்கள், பெண்களுக்கான வளையல் பொட்டு போன்ற பொருட்கள், துணிமணிகள் விற்பனை என பெண்களின் வாழ்க்கை தர வருமானத்தை உயர்த்தும் வகையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதுவரை டெல்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்று வந்த இந்த சந்தை தற்போது தேனி மாவட்டத்தில் காலெடுத்து வைத்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருள்களின் கல்லூரிச்சந்தை நடைபெற்றுவருகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த சந்தையை, மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், இதுபோன்ற கல்லூரிச்சந்தைகள் மூலமாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருள்களை எளிமையாக சந்தைப்படுத்த இயலும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் பற்றி கல்லூரி மாணவிகள் தெரிந்துகொண்டு பயனடைய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 30 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் இச்சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
செயற்கை அணிகலன்கள், அழகிய துணிப்பைகள், வாசனைத் திரவியங்கள், மென் பொம்மைகள், மகளிருக்கான ஆடை அலங்கார பொருள்கள், கைத்தறிப் புடவைகள், மூலிகை திரவியங்கள், ஓவியங்கள் மற்றும் ஏராளமான கைவினைப் பொருள்களை இந்தக் கல்லூரிச் சந்தையில் வாங்க முடியும்.
கல்லூரிச்சந்தை கல்லூரி மாணவிகளிடம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.