சென்னை: 
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர்.
பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் கடந்த 5ஆம் தேதி  தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வர முடியாதவர்கள், மருத்துவமனைகள் தொலைவில் உள்ள பகுதி மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நோயாளிகள் பலர் மருத்துவனைக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இத்தகைய சூழலில் நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் வீடு தேடிப் போய் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள திட்டம் தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.
நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு அவர்கள் வீடு தேடிப் போய் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.