கோவை:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் கோவையில் 112 தனியார் மருத்துவமனைகள் இணைந்தன.

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் அரசே ஏற்கும் என, முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, கோவையில் உள்ள 112 தனியார் மருத்துவமனை இணைந்தன.

இதையடுத்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தின்கீழ் இந்த் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.