சென்னை:

ந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ்

நேற்று திருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற  பெருமாநல்லூட்ர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது,  காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும், மோடியை வசைபாடு வதே அவர்களின் அரசியல் என்றவர், காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் – என்று கூறினார்.

எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்ற மோடி,  இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார் முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது என்றும்,  தவறுகளுக்கும் ஊழலுக்கும் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்றும் பேசினார்.

மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் இடஒதுக்கீட்டு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மோடி மீது சரசமாரியாக குற்றம் சாட்டினார்.

இடஒதுக்கீடு பேச தகுதிற்ற கட்சி பாஜக என்று குற்றம் சாட்டியவர், மோடியின் இட ஒதுக்கீடு, சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கானதே என்று கூறினார்.

தற்போது தொழில்நகரமான திருப்பூரில் நின்று கொண்டு பேசுகிறார் என்றவர்,  மோடி பதவி ஏற்றபோது எப்படி இருந்த திருப்பூர் தொழில்நகரம் இன்று எப்படி உள்ளது.  தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாமல், ஜவுளி  தொழிலை புதைகுழிக்குள் தள்ளியதே மோடியின் சாதனை என்றவர்,  இன்று தமிழகத்தில் தொழில் நகரங்களை அழித்து, லட்சக்கணக்கனோர் வேலையிழந்து தற்கொலைக்கு தள்ளு வருபவர் மோடி என்று கடுமையாக குற்றம் சாட்டினார். அதனால் பாஜகவை,  வேறோரும்  வேரடி மண்ணோடும் அகற்றுவதற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத கட்சி பாஜக. காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோதுதான், அவருடைய வீட்டை எரிக்க முயற்சி செய்தார்கள். அனில் அம்பானி நிறுவனத்துக்கு 30ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்த மோடி, காமராஜர் குறித்து பேச தகுதி கிடையாது.

எனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரை சொல்லி, தான் ஊழலற்றவர் என நிரூபித்தால், பிரதமர் மோடி அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் எச்சரித்தார்.