அனைவருமே ‘பைலட்’ ஆக பணியாற்றும் விமான குடும்பம்!

டில்லி,

ரே குடும்பத்தை சேர்த்ந  அப்பா, அம்மா, மகள், மகன் எல்லோருமே பைலட்டுகள் தான். இந்த குடும்பம் இந்தியாவை சேர்ந்தது என்பது பெருமைப்படத்தக்கது.

வானமே எல்லையாக கடந்த இரண்டு தலைமுறையாக இந்த குடும்பத்தில் அனைவருமே பைலட் தொழில்புரிந்து வருகின்றனர்.

நாட்டில் எத்தனையோபேர் பைலட்டாக பணிபுரிய கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பைலட்டாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டில்லியை சேர்ந்த  சேர்ந்த ஒரு குடும்பம் தான் இந்த பெருமையை பெற்றிருக்கிறது. இந்த குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பைலட் தொழிலையே செய்து வருவதாக கூறப்படுகிறது.

அவர்களது பெற்றோர்கள் முதல் தற்போதைய தங்களின் குழந்தைகள் வரை அனைவரும் பைலட்டுகளாகவே பணியாற்றி வருகின்றனர்.

டில்லியை சேர்த்ந ஜெய் தேவ் பேசின் என்பவர் கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றினார். நாட்டிலேயே அப்போது கமாண்டராக பணியாற்றிய ஏழு பேரில் இவரும் ஒருவர். இவருடைய மகன் ரோஹித் தன் தந்தையை பின்பற்றி பைலட்டானார்.

பின்னர் ரோஹித் நிவேதிதா என்பவரை மணந்தார். அவரும் பைலட்தான்.   26 வயதில், உலகிலேயே மிகவும் இளம்வயதில் ஜெட் பைலட்டாக பணியாற்றிய முதல் பெண் நிவேதிதா.

இவருக்கு  இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக பணியாற்ற உத்தரவு கடிதம் 1984-ஆம் ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதி” கிடைத்தது. அதை தருணத்தை மறக்க முடியாது  என கூறுகிறார் நிவேதிதா.

நிவேதிதா 20 வயதில் பைலட் ஆனார். 33-வது வயதில் ஏர்பஸ்-300 என்ற உலகிலேயே மிகப்பெரும் விமானத்தின் கமாண்டர் ஆனார்.

இவரது மகனும் தற்போது பைலட்டாக பணியாற்றி வருகிறார். நிவேதிதா தம்பதியரின் மகன் ரோஹன் போயிங் 777 விமானத்தின் கமாண்டராக பணிபுரிகிறார்.

இதுகுறித்து நிவேதிதாவின் மகள் நிஹாரிகா  கூறும்போது,

“என்னுடைய அம்மா தன்னுடைய பணிக்கு எப்படி தயாராகிறார் என்பதை நான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ரசித்திருக்கிறேன். அப்போதிருந்தே என்றைக்காவது ஒருநால் அதேபோல் உடை அணிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொள்வேன்”, எனக்கூறும் அவர்களின் 26 வயதான மகள் நிஹாரிகா, இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானத்தின் கமாண்டராக பணிபுரிகிறார்.

ரோஹித் தன் மனைவி நிவேதிதாவுடன் ஒருமுறை கூட தொழில்ரீதியாக விமானத்தில் பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால், ரோஹித் தன் மகன் ரோஹனுடன் சுமார் 10 பயணங்களுக்கும் மேல் ஒன்றாக பயணித்திருக்கிறார்.

எப்போதுமே நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். பருவநிலை மோசமாக இருக்கும்போது விமானத்தை தரையிறக்கக் கூடாது என சொல்லுவோம். அவசரப்படக்கூடாது என அவர்களை அறிவுறுத்துவோம்.” என்று கூறுகிறார் ரோஹித்.

மாதத்திற்கு சுமார் 5 -6 நாட்கள் மட்டுமே குடும்பத்தோடு இருக்க நேரம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர் இந்த குடும்பத்தினர்.
English Summary
The only Indian family where mum, dad, daughter and son are all Pilots; ‘The Flying Family’