சென்னை:
மிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆவடியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஆவடி மாநகராட்சியிலிருந்து ஓசிஸ் மைதானம் வரை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், பள்ளிகளில் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகள் இன்னமும் அமலில் இருப்பதாக குறிப்பிட்டார். இதை தீவிரமாக கண்காணிக்க பள்ளி நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.