Skip to content
  • Tue. Sep 22nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

11, 12-ம் வகுப்புகளுக்கு பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்… தமிழக அரசு

Jul 6, 2020

சென்னை:

தமிழகத்தில்11 மற்றும்  12-ம் வகுப்புகளுக்கு பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.  மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையே தொடரும் என்று தமிழக அரசு  கூறியுள்ளது.


கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும்  பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணாக்கர்களின் படிப்பு கடந்த 4 மாதங்களாக தடைபட்டுள்ளது. பல வகுப்புகளுக்கு தேர்வு இல்லாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுவிட்டது,.
தமிழகத்தில், பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையை (Group) மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு ஏற்கனவே  அறிவித்திருந்தது. இந்த நிலையில், பழைய பாடத்தொகுப்பே இந்த கல்வி ஆண்டிலும் தொடரும் என தமிழகஅரசு தெரிவித்து உள்து.
பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை இடம்பிடித்திருந்தது. பழைய முறையில் 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பிடித்திருந்தது.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு பாடம் நீக்கமும், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ள தொகுப்புகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் உயர்க்கல்வி படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post navigation

தலித் நபரை செருப்பை சுமக்க வைத்த திமுக எம்எல்ஏ… மன்னிப்பு கோருவாரா?
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது… உயர்நீதி மன்றம்

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer