சென்னை:
மிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரிலும் வலியுறுத்துவார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். இதன்மூலம், 21 லட்சத்து 63 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் அதே அளவில் இருக்கிறது என எடுத்துக்கொள்ள முடியாது. உயிரிழப்புகள் குறைகின்றன. உயிரிழப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. கொரோனாவைத்தாண்டி பல்வேறு பாதிப்புகளை கொண்டவர்களால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. எப்படி இருந்தாலும், மரணம் என்பது மனதை உருக்குகிற செயல்தான். அது குறைய வேண்டும்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.