சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்றும், இன்று வரை 2,00,79,887 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 184 வது நாளில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel