உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுகதயார்: ஓபிஎஸ்

Must read

மதுரை:
உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த பிறகு டெல்லியில் இருந்து இரவு 8.40 மணியளவில் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது என தெரிவித்தார்.

மீண்டும் அதிமுக வை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசியது, மீண்டும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசகர் வீட்டில் நடந்த ரெய்டு, அதிமுகவில் ஒற்றை தலைமுறை வேண்டுமென சசிகலா பேசியது உள்ளிட்ட கேள்விகளுக்கு பேசாமல் மெளனமாக நகர்ந்தார்.

More articles

Latest article