மதுரையில் மோடி பேச உள்ள இடத்தின் பெயர் ‘வாஜ்பாய் திடல்’ என மாற்றம்: மதுரையில் பரபரப்பு

Must read

மதுரை:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரசார உரையாற்ற வரும் பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதற்காக பிரமாண்ட மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மைதானத்திற்கு,  ‘அடல் பிஹாரி வாஜ்பாய் திடல்’ என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வரும் பிரதமர் மோடி, தமிழகத்தில் வரும்  27ந்தேதி பிரசாரத்தை  மதுரையில்  தொடங்குகிறார்.

இதற்காக  மதுரை ரிங்க்ரோடு பகுதியில் பிரமாண்ட திடல் அமைக்கும் பணிகளை பாஜக செய்து வருகிறது. மேடை, பிரமாண்ட பந்தல்கள், கழிப்பிடம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்த பாஜகவின் மாநில செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மதுரைக்கு  27ம் தேதி வரும் மோடி, மதுரையில் உள்ள  அம்மா திடலை தாண்டி 5 கி.மீ தூரமுள்ள மைதானத்தில் உரை நிகழ்த்துகிறார். தற்போது தயார் செய்யப்பட்டு வரும் அந்த மைதானம்,  அடல் பிஹாரி வாஜ்பாய் திடல் என்று பெயர் மாற்றப்படும் என்று கூறினார்.

More articles

Latest article