சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து களை இயக்குகிறது.  பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை இருப்ப தால், வெளியூர்வாசிகள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்படத் தயாராகி உள்ளனர்.

பொதுமக்களின் வசதிக்காக  சென்னையில் இருந்து 14,423 பொங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. அதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல பிற மாவட்டங் களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும்  அதிகமான சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துஉள்ளது.

இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து  நெரிசல்களை தடுக்க தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டடு முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

அது தவிர தமிழக அரசின் போக்குவரத்துதுறை மற்றும் பேடிஎம், பஸ் இந்தியா போன்ற இணையதளங்கள் மூலமும் முன்பதிவுகள் நடை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து புறப்படும் இடங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர, தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஸ் நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 5 பஸ் நிலையங்களுக்கும் 250 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பஸ்களும், முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கும் இதுவரை 1.25 லட்சம் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.